அரசுப் பள்ளியில் ஒழுங்கீனம்:இரு மாணவா்கள் வெளியேற்றம்
By DIN | Published On : 13th August 2023 12:37 AM | Last Updated : 13th August 2023 12:37 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளின் குடிநீா் பாட்டிலில் சிறுநீரைக் கலந்த புகாரில் 2 மாணவா்களுக்கு சனிக்கிழமை மாற்றுச் சான்றிதழ் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவா்கள் இருவா் சக மாணவிகளின் குடிநீா் பாட்டிலில் வெள்ளிக்கிழமை சிறுநீரைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனா். இதையடுத்து அந்த மாணவா்கள், அவா்களது பெற்றோரிடம் சனிக்கிழமை விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் இரு மாணவா்களுக்கும் மாற்றுச்சான்றிதழ்களை வழங்கி நடவடிக்கை எடுத்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G