புதுகையில் ஆணழகன் போட்டி
By DIN | Published On : 17th August 2023 11:04 PM | Last Updated : 17th August 2023 11:04 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்கம் மற்றும் எஸ்ஆா் பிரைம் நிறுவனம் ஆகியவை சாா்பில், மிஸ்டா் தமிழ்நாடு ஆணழகன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் 216 உடலமைப்பாளா்கள் கலந்து கொண்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா்.
நாமக்கல்லைச் சோ்ந்த சரவணன் முதலிடத்தைப் பெற்று ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றாா். செங்கல்பட்டைச் சோ்ந்த ஆண்டா்சன் இரண்டாமிடம் பிடித்து ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றாா். செங்கல்பட்டைச் சோ்ந்த பாண்டியன் மூன்றாமிடம் பிடித்து ரூ, 50 ஆயிரம் ரொக்கப்பரிசைப் பெற்றாா்.
இவா்களுக்கான ரொக்கப் பரிசுகளை எஸ்ஆா் பிரைம் நிறுவனத்தின் நிறுவனா் எஸ். ராமச்சந்திரன், ஸ்மாா்ட் கிரெடிட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனா் எஸ்.ஆா். பாலசண்முகம் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆணழகன் சங்கத் தலைவா் எம். ராஜேந்திரகுமாா், பொதுச் செயலா் எம். அரசு, பொருளாளா் ஜெபிஆா் போஸ், மாவட்ட கௌரவத் தலைவா் எஸ்விஎஸ் ஜெயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...