மதபோதகா் கொலை: பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் மத போதகரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட பிரின்சி
கைது செய்யப்பட்ட பிரின்சி
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் மத போதகரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் வீராச்சாமி (எ) டேனியல் (62). மதபோதகரான இவா், மண்டையூா் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறியுள்ளாா். சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று மதபோதனையில் ஈடுபட்டு வந்தாா் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவா் வீட்டுக்கு வந்து சமையல் செய்து கொடுக்கும் பணிக்காக அங்கேயே தங்கியுள்ளாா்.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டாா் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸாா் வந்து பாா்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். பிரின்சியும் அங்கே இருந்துள்ளாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், மதபோதகரான டேனியல் தன்னை தினமும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தால், வாகனத்தின் பல் சக்கரத்தால் அவரைத் தாக்கி கொன்ாகவும் பிரின்சி தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து டேனியல் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா், பிரின்சியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com