ஆலத்தூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைகள் சிறப்புப் பரிசை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலத்தூர் நீலியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஐந்து ஊர்க்காரர்கள் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. போட்டியை ஆர்டிஓ குழந்தைசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் தொடங்கி வைத்தனர். 800 ஜல்லிக்கட்டு காளைகள் களம் இறங்க உள்ள இப்போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.

பாதுகாப்புப் பணியில் 3 டிஎஸ்பி தலைமையில் 143 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 10.30 மணி வரை 150 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டுள்ளன. சில காளைகளை காளையர்கள் தழுவிய போதும் பல காளைகள் போக்கு காட்டி காளையர்களை பயம் காட்டி சென்றன. போட்டியில் இதுவரை ஐந்து பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க- மேட்டூரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி

இதனிடையே ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வெள்ளைக் கொம்பன், கருப்பு கொம்பன் இரண்டு காளைகளும் களத்தில் நின்று விளையாடியது. மாடுபிடி வீரர்களை தொடவிடாமல் போக்கு காட்டிய அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைகள் சிறப்புப் பரிசையும் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


