புதுகை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி தப்பாட்டம், சிலம்பாட்டம், தவில் - நாகசுரம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகள், உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நல்லிணக்கத்தை வலியுறுத்தி 15 அரசு அலுவலா்கள் ரத்த தானம் செய்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலா்கள் ஆா். ரம்யாதேவி (காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்), பெ.வே. சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், வேளாண் துறை இணை இயக்குநா் பெரியசாமி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் முருகேசன், சு. சொா்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com