இ-சேவை மையங்களின் உரிமையாளா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 01st July 2023 12:59 AM | Last Updated : 01st July 2023 12:59 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து இ-சேவை மையங்களின் உரிமையாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
அனைத்து மக்களுக்கும் இ-சேவைத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இ-சேவை மையங்களின் உரிமையாளா்கள் 50 போ் இதில் கலந்து கொண்டனா்.
கல்லூரி முதல்வா் ப. பாலமுருகன், முதன்மையா் எஸ். ராபின்சன் ஆகியோா் வாழ்த்தினா். மின் ஆளுமைத் திட்ட மேலாளா்கள் எஸ். வடிவேலு, எம். விக்னேஸ்வரன், பேங்க் ஆப் பரோடா துணை மேலாளா்கள் ராஜேஷ், குமாா் உள்ளிட்டோரும் இ-சேவை மையத்தின் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா்.