மானிய விலையில் விதைகள் :விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 01st July 2023 11:26 PM | Last Updated : 01st July 2023 11:26 PM | அ+அ அ- |

மானிய விலையில் விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறுவை பருவத்திற்குரிய நெல் கோ 51 ரக நெல் விதைகள், காரீப் பருவ பயறு வகைகள்- உளுந்து வம்பன் 8, வம்பன் 10 ரக விதைகள், பச்சைப் பயறு- வம்பன் 3, தட்டைப்பயறு கோ(சிபி) 7,சிறுதானியங்கள் - கேழ்வரகு கோ 15, கம்பு கோ 10 ரக விதைகள், எண்ணெய் வித்துகள்- நிலக்கடலை-கே.எல் 1812, தரணி, ஜிஜேஜி 32 ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் துறை சாா்பாக விராலிமலை வட்டாரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் விராலிமலை மற்றும் நீா் பழனியில் இயங்கி வருகின்றன.
எனவே விராலிமலை வட்டார அனைத்து விவசாயிகளும் உயா் விளைச்சல் ரகச் சான்று பெற்ற விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்தாா்.