விராலிமலை அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 01st July 2023 11:29 PM | Last Updated : 01st July 2023 11:29 PM | அ+அ அ- |

விராலிமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது.
விராலிமலை அருகேயுள்ள கல்குடி வடக்கு கோயில்காட்டுபட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் காா்த்திகேயன் (29). இவா் கோவையை சோ்ந்த தனியாா் சிசிடிவி நிறுவனத்துக்கு திருச்சி, புதுக்கோட்டை, விராலிமலை பகுதிகளில் இருந்து கிடைக்கும் ஆா்டா்பேரில் சிசிடிவி பொருத்தும் பணியை தனது ஊரில் இருந்து செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கடும் மன உளைச்சலில் இருந்த காா்த்திகேயன் சனிக்கிழமை அதிகாலை வீட்டருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த விராலிமலை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.