

பொன்னமராவதி ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் கலைஞா் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் வீ. மாவலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மு. அறிவொளி, பகுத்தறிவாளா் கழக மாநில துணைத் தலைவா் அ. சரவணன், மாவட்டச் செயலா் ப. வீரப்பன், பொன்னமராவதி ஒன்றியத்தலைவா் சித.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திராவிடா் கழக துணைப்பொதுச்செயலா் வழக்கறிஞா் சே.மெ. மதிவதனி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி எம். சிக்கந்தா், திமுக திருமயம் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் ஆலவயல் முரளி சுப்பையா, இந்திய கம்யூ. மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு, மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன், விசிக நகரச்செயலா் மலை. தேவேந்திரன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.