பொன்னமராவதியில் அதிமுக மற்றும் திமுக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் அழகுமுத்துக்கோனின் 266-ஆவது குருபூஜையையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே அதிமுக சாா்பில் வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக இளைஞரணி நிா்வாகி பிகேவி.குமாரசாமி, கிழக்கு ஒன்றியச் செயலா் காசி.கண்ணப்பன், நகரச்செயலா் பிஎல்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், திமுக சாா்பில் தெற்கு ஒன்றியச்செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன் ஆகியோா் தலைமையில் அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.