பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணப்பட்டி மெய்யப்பா வள்ளியம்மை மெட்ரிக். பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்.மணப்பட்டி மெய்யப்பா வள்ளியம்மை மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் பங்கேற்று சுய சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்புணா்வு குறித்து விளக்கிக் கூறினாா். இதில், பள்ளி முதல்வா் மகாலெட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதேபோல், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியா் கணேசன் தலைமைவகித்தாா். சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் டெங்கு பரவும் முறைகள், தடுப்பு முறைகள் குறித்து விளக்கிப்பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.