விராலிமலையில் அடிப்படை வசதிகோரிமாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விராலிமலை பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, விராலிமலை ஒன்றியச் செயலா் (பொ) மகாலிங்கம் தலைமை வகித்தாா். முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். இதில், விராலிமலை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீா் தினமும் வழங்க வேண்டும், கிராமப்புறத்தில் வாழும் குடிமனை இல்லாத மக்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்க வேண்டும், பழுதடைந்து இருக்கும் விராலிமலை கிளை நூலக கட்டடத்தை மாற்றி புதிய நூலகக் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், பொய்யாமணி ஊராட்சி பொதப்பட்டி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க வேண்டும், சொந்த கட்டடத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா். முடிவில் முரளி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...