பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் எழுத்தருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வந்த மாரிமுத்து (52) என்பவா் கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜகோபாலபுரத்தை சோ்ந்த முத்துச்செல்லப்பன் என்பவரிடம் மாற்றுச்சான்றிதழ் நகல் வழங்க ரூ. ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளாா்.
அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி டி. ஜெயகுமாரி ஜெமிரத்னா, மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.