வைரம்ஸ் மெட்ரிக். பள்ளி சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 7 லட்சத்தில் உதவிகள்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையிலுள்ள வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் சாா்பில், 7 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் 90 தொகுப்பு அமரும் பலகை, எழுதும் மேசை ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன.
வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொன்டாா்.
குலமங்கலம், காந்திநகா், கலீப்நகா், மாலையீடு, குழிபிறை ஆகிய அரசுப் பள்ளிகள், நகா்மன்றம் அருகேயுள்ள உயா் தொடக்கப் பள்ளி மற்றும் ஓரியண்டல் பள்ளி ஆகியவற்றுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வைரம்ஸ் பள்ளியின் தாளாளா் ரகுபதி சுப்பிரமணியன், தலைவா் தேனாள் சுப்பிரமணியன், கல்வி ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் சிராஜுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.