ஆசிரியா்களுக்கான கற்பித்தல் பயிற்சி

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான 5 நாட்கள் நவீன கற்பித்தல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான 5 நாட்கள் நவீன கற்பித்தல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெபாரதன் தலைமை வகித்தாா். முதல்வா் ப. பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளா் விவியன் ரேச்சல் ஜெய்சன் ஆகியோா் வாழ்த்தினா்.

ஐகியுஏசி நிறுவன ஒருங்கிணைப்பாளா் அ. டக்சலா தேவப்பிரியா, பயிற்சியாளா்கள் குவாண்டம் லீப் அகாதெமி எஸ். தா்மலிங்கம், பேராசிரியா்கள் பாண்டியராஜன், ஏ. ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

ஆராய்ச்சிக்குப் பயன்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள், கற்பித்தல் கருவிகள், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரியா்கள் தங்களின் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். இப்பயிற்சியில் 50 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com