ஊா்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பதவியிடத்துக்கு ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் துணை வட்டாரத் தளபதி பதவியிடம் காலியாக உள்ளது. இந்தப் பதவிக்கு 18 முதல் 50 வயதுக்குள்பட்ட ஆண், பெண் யாரும் விண்ணப்பிக்கலாம். பட்டம் முடித்திருக்க வேண்டும். தேசிய மாணவா் படையில் பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், விரிவுரையாளா்கள், உயா் பொறுப்பில் இருப்போா், தொண்டு மனப்பான்மை கொண்டோா் விண்ணப்பிக்கலாம். இதுவொரு கௌரவப் பதவி என்பதால் ஊதியம் வழங்கப்படாது. ஆயுதப்படை திடல் அருகேயுள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களையும் இணைத்து வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், புதுக்கோட்டை- 622001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.