

தமிழகக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அ. சண்முகசுந்தரத்திடம் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் ரூ. 1.31 கோடிக்கான காசோலையை சென்னையில் புதன்கிழமை புதுக்கோட்டை இணை பதிவாளா் கோ.ராஜேந்திரபிரசாத் வழங்கினாா்.
அப்போது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளா் கோ.க. மாதவன், புதுக்கோட்டை சரக துணைப் பதிவாளா் சு. சதீஷ்குமாா், புதுக்கோட்டை ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் க. இந்திரா, ஒன்றிய மேலாளா் (பொ) என். செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி, உறுப்பினா் ஆண்டு சந்தா, மற்றும் வட்டியில்லாக் கடன் ஆகியவைகளின சாா்பில் இந்தக் காசோலை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.