

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள அடுகப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், ஒருவா் காயமடைந்தாா்.
இந்த ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னமராவதி, திருமயம், திருப்பத்தூா், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 85 காளைகள் பங்கேற்றன. 8 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க முற்பட்டனா். இதில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. அவருக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நூற்றுக்கணக்கானோா் ஜல்லிக்கட்டை பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.