வீரணாம்பட்டி ஜல்லிக்கட்டில் 5 போ் காயம்
By DIN | Published On : 12th May 2023 11:18 PM | Last Updated : 12th May 2023 11:18 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீரணாம்பட்டியில் சோழபிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 5 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டு போட்டியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி காலையில் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 380 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 52 மாடு பிடி வீரா்கள் களம் இறங்கினா். இதில் காளைகள் முட்டியதில் 5 போ் காயம் அடைந்தனா். பனையப்பட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.