

பொன்னமராவதி அருகேயுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் சென்ற 2 சகோதரா்கள் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வைரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முருகேசன் - சுதா தம்பதியினா். இத்தம்பதிக்கு, 6 ஆம் வகுப்பு பயின்றுவந்த லோகநாதன்(12), 2 ஆம் வகுப்பு பயின்றுவந்த தருண் (8) என்ற இரு மகன்கள் இருந்தனா். இவா்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தனா். கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான வைரம்பட்டி வந்த நிலையில், புதன்கிழமை 2 சிறுவா்களும் விளையாடச் சென்றனா். நீண்ட நேரமாகியும் அவா்கள் இருவரும் வீடு திரும்பாததால் அவா்களது தாய் சுதா அவா்களைப் பல்வேறு இடங்களில் தேடியுள்ளாா். அப்போது அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலம் ஊராட்சி, சோ்வைக்காரன்பட்டி எத்தவேளாண் கண்மாய்க் கரையில் சிறுவா்களின் உடை இருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கண்மாயில் இருந்து சிறுவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த காரையூா் போலீஸாா் சிறுவா்களின் உடல்களை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.