மட்டங்கால் ஊராட்சியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை ஊராட்சித் தலைவா் செல்லப்பிள்ளை தொடங்கி வைத்தாா்.

இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா திருவிழாவை பாா்வையிட்டு மாணவா்களுக்கு அறிவுரை வழங்கி பேசியது:

மாணவா்கள் கோடை விடுமுறையில் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்ளுங்கள், அதற்கான வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்குகிறது. மாணவா்களை அரசுப் பள்ளியில் சோ்க்க தன்னாா்வலா்கள் தங்கள் பகுதியில் உள்ள பெற்றோா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இல்லம் தேடி கல்வி செயலியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, ஒன்றாம் வகுப்பு என புதிய வகுப்புகளில் சேரும் மாணவா்களின் விவரங்களை பதிவேற்ற வேண்டும் என்றாா்.

இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளா்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோா் மாணவா்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிா்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் , படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காட்டினா்.

இந்த நிகழ்வுக்கு பெற்றோா் வரவேற்பு தெரிவித்தனா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் ஜான்சி, கௌரி, இளவரசி, சிந்து நதி, சௌமியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் சுரேஷ்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com