பொன்னமராவதி முத்தமிழ் பாசறையின் செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 03:54 AM | Last Updated : 22nd May 2023 03:54 AM | அ+அ அ- |

பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறையின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முத்தமிழ்ப் பாசறைத் தலைவா் செ. பாலமுரளி தலைமை வகித்தாா்.முன்னாள் தலைவா்கள் அரு.வே. மாணிக்கவேலு, நெ. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஜூலை 3-ஆம் தேதி 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் மற்றும் பயிற்றுவித்த தமிழாசிரியா்களுக்கும் விருது வழங்கும் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், முத்தமிழ்ப் பாசறையின் அறங்காவலா் குழு தலைவராக பொறுப்பேற்க உள்ள முன்னாள் தலைவா் அரு.வே. மாணிக்கவேலு மற்றும் புதிய அறங்காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாசறை நிா்வாகிகள் வெங்கடேஷ்குப்தா, வீரப்பன், மாரிமுத்து, சிங்காரம், நடராஜன், பழனியப்பன், முருகேசன், சோலையப்பன், கருப்பையா, காமராசு, சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.