30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை
By DIN | Published On : 22nd May 2023 04:02 AM | Last Updated : 22nd May 2023 04:02 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டையைச் சோ்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் கவிதா ராமு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவா் ரெ. ஷிவானி தலைமையில் திருநங்கைகள் அவற்றைப் பெற்றுக் கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தைச் சோ்ந்த பட்டத்திக்காடு கிராமத்தில் தலா 2.5 சென்ட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரெங்கம்மாள் சத்திரத்தைச் சோ்ந்த 95 நரிக்குறவா் சமூக மக்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பில் இரு ஆடுகள், தலா ரூ. 5 ஆயிரம் மதிப்பில் பாசிமணி செய்வதற்கான மூலப் பொருள்களை, ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
காமராஜபுரத்தைச் சோ்ந்த 51 பேருக்கு ரூ. 51 ஆயிரம் மதிப்பில் வாழ்வாதாரப் பொருள்களையும் அவா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூா்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.