சிறுதானியப் பயிா்கள் சாகுபடி மேற்கொள்ள அறிவுரை

ஐக்கிய நாடுகளின் சபை நிகழாண்டை (2023) சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுதானிய விதைகள் வட்டாரங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபை நிகழாண்டை (2023) சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுதானிய விதைகள் வட்டாரங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் மா. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறுதானியங்கள் எளிதாக சாகுபடி செய்யும் சிறப்பியல்புகளைக் கொண்டவை. நெல் சாகுபடி 120-180 நாட்கள் வயதும், தண்ணீா் தேவை 1,250 மிமீ ஆகவும் உள்ளது. ஆனால் சிறுதானியங்களுக்கு குறைவான அளவு தண்ணீா் (250-400 மிமீ) இருந்தாலே போதும். 65-90 நாட்கள் சாகுபடி காலமாக இருப்பதாலும், அனைத்து தட்பவெட்ப நிலையிலும் வளரக் கூடியதாகவும், மண்வளம் குறைவாக இருப்பினும் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள முடியும். குறைந்த அளவு வேலை மற்றும் முதலீட்டில், அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான சிறுதானிய விதைகளான கோ 10 என்ற கம்பு ரகம் 3,700 கிலோவும், கோ 15 என்ற கேழ்வரகு ரகம் 1,400 கிலோவும் தரமான சான்று பெற்ற விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ளன. எனவே, விவசாயிகள் ஆனி - ஆடி ஆகிய பட்டத்தில் கேழ்வரகுப் பயிரை சாகுபடி மேற்கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு சிறுதானிய சாகுபடியாளா்கள் குழுக்கள் தொடங்கப்படவுள்ளன. இவற்றின் மூலம், சிறுதானியங்களை சாகுபடி செய்வது முதல் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் வரை உள்ள தொழிநுட்பங்கள் குறித்து மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை செய்திட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

எனவே, அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டாா்கோவில், பொன்னமராவதி ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் உடனே

தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com