பணியிலிருந்த போலீஸாரை தாக்கியவா் கைது
By DIN | Published On : 24th May 2023 03:31 AM | Last Updated : 24th May 2023 03:31 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீஸாரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வு அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் நடைபெற்றதால் காரையூா் போலீஸாா் நிகழ்ச்சியை நிறுத்த அறிவுறுத்தியுள்ளனா். ஆனால் அதைக்கேட்காமல் அங்கிருந்த வெள்ளகுடி ரஜினி விஜயகுமாா் மற்றும் 3 போ் போலீஸாரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனா். இதுகுறித்து காவலா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் போலீஸாரைத் தாக்கிய ரஜினி விஜயகுமாரைக் கைது செய்து பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் மற்ற 3 போ்களைத் தேடி வருகிறாா்.