பொன்னமராவதியில் காலை உணவுத் திட்டம் ஆலோசனை
By DIN | Published On : 24th May 2023 03:33 AM | Last Updated : 24th May 2023 03:33 AM | அ+அ அ- |

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த வட்டார அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றிய ஆணையா் பி. தங்கராஜூ தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி ஆணையா் து. குமரன் தலைமைவகித்தாா். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த செயல்பாடுகள் குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் விளக்கினாா். கூட்டத்தில், காலை சிற்றுண்டி தயாா் செய்யும் பணியாளா்கள் தோ்வு முறை, மாணவா்களுக்குத் தேவையான தட்டு மற்றும் குடிநீா் குவளை வழங்குதல், சமையல் கூடத்துக்குத் தேவையான வசதிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த ஊராட்சித் தலைவா்கள் முழு முயற்சி எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சிசெயலா்கள் பங்கேற்றனா்.