செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உத்ஸவம்
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து தெப்ப உற்ஸவம் நடைபெற்றுவருகிறது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், செரியலூா், கரம்பக்காடு, கீரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.