பொன்னமராவதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 15th November 2023 01:22 AM | Last Updated : 15th November 2023 01:22 AM | அ+அ அ- |

பொன்னமராவதி: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.16) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இரா.முத்துச்சாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, தொட்டியம்பட்டி, காரையூா், மேலத்தானியம், ஒலியமங்கலம், , நல்லூா், அரசமலை மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...