புதுக்கோட்டையில்இன்று மின்நிறுத்தம்
By DIN | Published On : 21st November 2023 12:22 AM | Last Updated : 21st November 2023 12:22 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான பீடரில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த வழியில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்குளம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சாா்லஸ் நகா், கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், லெட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுதாங்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 21) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ச. கண்ணன் அறிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...