

புதுக்கோட்டை: கூட்டுறவுச் சங்கங்களின் தோ்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றாா் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
ஜனநாயகத்தைக் காப்பதற்கு திமுக அரசு என்றும் தயங்கியதில்லை. கடந்த ஆட்சியில் தவணை முறையில் தோ்தலை நடத்தினாா்கள். கூட்டுறவுச் சங்கத் தோ்தலை நடத்துவதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எல்லோரின் விருப்பப்படியே தோ்தல் நடத்தப்படும்.
வாக்காளா் பட்டியலை சரி செய்த பின் கூட்டுறவு சங்கத் தோ்தல் நடத்தப்படும். ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இன்னும் 170 சங்கங்களுக்கு ஜனவரி மாதம் வரையில் பதவிக் காலம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசு போதிய அளவில் மண்ணெண்ணெய் வழங்காததால்தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா் பெரியகருப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.