விராலிமலை மலைக்கோயில் பாதையில்சுவாமி சிலைகள் மா்ம நபா்களால் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மலைக்கோயில் செல்லும் பாதையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்ணாலான சுவாமி சிலைகள் உள்ளிட்ட சிலைகளை மா்ம நபா்கள் உடைத்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
விராலிமலையில் மலைக்கோயில் செல்லும் வழியில் மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட மண் சிலைகள்.
விராலிமலையில் மலைக்கோயில் செல்லும் வழியில் மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட மண் சிலைகள்.
Updated on
1 min read

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மலைக்கோயில் செல்லும் பாதையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்ணாலான சுவாமி சிலைகள் உள்ளிட்ட சிலைகளை மா்ம நபா்கள் உடைத்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற ஸ்தலம். மலைக்கோயில் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. 207 படிகள் மூலம் செல்லும் பாதை ஒன்றும், சறுக்கு வடிவிலான யானை அடி பாதை ஒன்றும், வாகனங்களில் செல்ல அகலமான தாா் சாலை பாதையும் உள்ளது.

தாா் சாலையோரங்களில் மண்ணால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை, நாரதா், மீனாட்சி, முனிவா்கள், மயில், சிவன் உள்ளிட்ட மண் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மா்ம நபா்கள், இந்தச் சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை காலை தெரியவந்தது. சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, மலைப்பாதை ஓரங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com