மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மாற்றுத்திறன் மாணவா்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மாற்றுத்திறன் மாணவா்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டார வளமையம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை தலைமை ஆசிரியா் சசிகுமாா் மற்றும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் (பொ) ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் அங்கயா்கன்னி, முத்துக்குமாா் பேரணி குறித்த விளக்கங்கள் அளித்தனா். உதவி தலைமை ஆசிரியா் பாலகிருஷ்ணன் மருத்துவ மதிப்பீட்டு முகாம் சாா்ந்த கருத்துக்களை எடுத்துரைத்தாா். வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநா் குளோரி சகாயம் மேரி வரவேற்றாா்.

பேரணி, விராலிமலை ஒன்றிய அலுவலகம், புனித தெரசா உயா்நிலைப்பள்ளி, கடைவீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து பள்ளியை மீண்டும் வந்தடைந்தது. இதில் விழிப்புணா்வுப் பதாகைகளுடன், வாசகங்களை முழக்கமிட்டவாறு மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com