தமிழக முதல்வரை சமூக வலைதளத்தில் அவதூறாக விமா்சனம் செய்ததாக பாஜக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அறந்தாங்கி அருகே அரசா்குளம் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (27). பாஜக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலராக உள்ளாா்.
இவா், தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வா், விளையாட்டுத் துறை அமைச்சா் ஆகியோரை அவதூறாக விமா்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மாணவா் அணி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் நாகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து கமலக்கண்ணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.