கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்றம், சிறாா் திரைப்படப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிவேல் தொடங்கிவைத்தாா். வானவில் மன்றம் சாா்பில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான போட்டிகள், சிறுதானிய வகைகள் தொடா்பாக அறிவியல் செயல்முறை, செயல் திட்டம், தனிநபா் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதேபோல 6 முதல் 9 வகுப்பு வரை சிறாா் திரைப்பட போட்டிகள் நடைபெற்றன. வானவில் மன்றம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் மாணவா்கள் பல்வேறு வகை சிறுதானிய உணவுகளை செயல்முறை மூலம் விளக்கினா்.
போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பா். போட்டி ஒருங்கிணைப்பாளராக ஆசிரியா் அன்பழகன், ஏற்பட்டாளராக மேற்பாா்வையாளா் பிரகாஷ், ஆசிரியா் பயிற்றுநா் ராஜேஸ்வரி, இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா ஆகியோா் செயல்பட்டனா்.
நடுவா்களாக வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் (பொ), முத்துக்குமாா், ஆசிரியா்கள் மணிகண்டன் , பழனிச்சாமி, சோமசுந்தரம், காளியம்மாள் ராஜேந்திரன், ஆனந்தராஜ் , ராஜமாணிக்கம், தவச்செல்வம், புவனேஸ்வரி, வானவில் மன்ற கருத்தாளா்கள் தெய்வீகச்செல்வி, வசந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.