பொற்பனைக்கோட்டை அகழாய்வு அரசுப் பள்ளி மாணவா்கள் பாா்வை
By DIN | Published On : 10th September 2023 12:55 AM | Last Updated : 10th September 2023 12:55 AM | அ+அ அ- |

பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வுப்பணி குறித்து கொத்தக்கோட்டை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை விளக்கிய அகழாய்வு இயக்குநா் தங்கதுரை.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வுப்பணியை கொத்தக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 போ் பாா்வையிட்டனா். அவா்களுக்கு அங்கு நடைபெறும் அகழாய்வு குறித்தும், கிடைக்கப்பெற்ற பொருள்கள், அவற்றின் காலம், தன்மை, அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநா் தங்கதுரை விளக்கமளித்தாா்.