விராலிமலை: இலுப்பூா், பாக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இலுப்பூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை.தளுச்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல், பாக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் எம். சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.