பொன்னமராவதி அருகே உள்ள விநாயகா் சிலை கரைப்பு விழாவில் சதுா்த்தி மத மற்றும் பகைமை உணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகதாஸ் மீது காரையூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலத்தானியம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 21 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விசா்ஜன விழா நடைபெற்றது. விழாவில் இந்து முன்னனியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகதாஸ் சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில் இவா் மத உணா்வை தூண்டி, பகைமை உணா்வைத் தூண்டும் வகையில் பேசியும், தமிழக அரசின் கொள்கைகளை விமா்சித்தும், காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறி காரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.