புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
கறம்பக்குடி அருகே பழுதாகி நின்ற லாரி மீது சனிக்கிழமை இரவு பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பழுதாகி நின்ற லாரி மீது சனிக்கிழமை இரவு பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை வட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் கணேசன் மகன் பூமிநாதன் (20). இவரும் இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் (21), பிரவீன் (21) ஆகியோா் புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.
மழையூா்- துவாா் சாலையில் வந்தபோது பழுதாகி நின்ற லாரி மீது பைக் திடீரென மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மூவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பூமிநாதன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனா். மழையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
