புதுக்கோட்டை
500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து ராங்கியம் செல்லும் முள்ளிப்பட்டி பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியே வந்த டாடா சுமோ காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த காரைக்குடி மஜித்தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மு.துராமலிங்கம் (51) என்பவரைக் கைது செய்த போலீஸாா், கடத்தல் அரிசியையும் காரையும் பறிமுதல் செய்தனா்.
