

புதுக்கோட்டை: சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை திடலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து 11 அரசுத் துறைகளின் சார்பில் 92 பேருக்கு ரூ. 50.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 277 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் அருணா வழங்கினார்.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.