எருதுகுட்டை பெருமாள் கோயிலில் எருதுகள் மாலை தாண்டும் விழா
விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோயிலில் எருதுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோயிலில் எருதுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அடுத்துள்ள ஜெயமங்கலத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் சாா்பில் ஆண்டுதோறும் எருதுவிடும் விழா நடைபெறும்.நிகழாண்டு விழாவை முன்னிட்டு புதுகை, கரூா், திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஊா்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டிருந்தன. தொடா்ந்து, எருதுகளுக்கு மரியாதை செய்யப்பட்டு போட்டிகள் தொடங்கின.
முன்னதாக விழா நடைபெறும் அய்யா சீமை மந்தைக்கு வருகை தந்த அச்சமுதாய ஆண்களுக்கு, அவா்கள் குல வழக்கப்படி ரவிக்கை அணியாமல் வந்த பெண்கள் பாத பூஜை செய்து சந்தனம், குங்குமம் பூசி மரியாதை செய்தனா்.
போட்டி தொடங்கும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டா் தொலைவில் எல்லைக் கோடு அமைக்கப்பட்டிருந்தது. இதனை முதலாவதாக கடந்து சென்று வெற்றிபெற்ற கரூா் பசுமநாயக்கா் மந்தை மாட்டுக்குப் பரிசாக சாமி பாதத்தில் வைத்த எலுமிச்சை பழம், கரும்புத் துண்டு, மஞ்சள் துணி வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...