புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் கூட்டத்தில் புதிய உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கிய சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் கூட்டத்தில் புதிய உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கிய சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா்.

108 அவசர ஊா்தி தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் (108) பணியாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Published on

புதுக்கோட்டை: அவசர ஆம்புலன்ஸ் (108) பணியாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொமுச) வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆம்புலன்ஸ் பணியாளா்கள் அனைவருக்கும் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கருணைத் தொகை ரூ. 9 ஆயிரத்தை, ரூ. 18 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பை சரண்டா் செய்து பணமாகப் பெற வழி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரகுபதி தலைமை வகித்தாா். தொமுச மாவட்டத் தலைவா் ரத்தினம், பொதுச்செயலா் வேலுச்சாமி, 108 தொழிலாளா் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் ராஜ்குமாா், பொதுச்செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com