புதுகை: நாளை 3 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 23) மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 23) மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

அரிமளம் ஒன்றியம், கைக்குளான்வயல் கே. புதுப்பட்டி சமுதாயக் கூடத்திலும், புதுக்கோட்டை ஒன்றியம் வடவாளம் ஊராட்சி மன்ற வளாகத்திலும், பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம் எஸ்ஏஆா் திருமண மண்டபத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com