விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published on

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடிக்கு சொத்து சோ்த்ததாக 2021-இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட முதன்மை நீதிபதி மாற்றுப்பணிக்கு சென்ால் கூடுதல் மாவட்ட நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சாா்பில் அரசு வழக்குரைஞரும், விஜயபாஸ்கா் தரப்பு வழக்குரைஞரும் ஆஜராகினா்.

இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை செப். 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com