நாளை இலவச சித்த மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் புதன்கிழமை (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சி நடைபெறவுள்ளது.


இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் 7ஆவது சித்த மருத்துவ தினத்தையொட்டி புதுக்கோட்டையில் புதன்கிழமை (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை நகரில் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசுகின்றனா்.
சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், குடல்புண், சைனஸ், தூக்கமின்மை, குழந்தையின்மை உள்ளிட்ட நாள்பட்ட அனைத்து நோய்களுக்கும் இம்முகாமில் இலவசப் பரிசோதனையும், ஆலோசனையும், மருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான சிகிச்சையை இலவசமாகப் பெறலாம் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். வனஜா கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...