புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவா்களுக்கு 50 சதவிகித மானியத்தில் இயந்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவா்களுக்கு 50 சதவிகித மானியத்தில் இயந்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.

புதுக்கோட்டையில் ரூ. 57 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் மூலம் 99 பேருக்கு ரூ. 57.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் மூலம் 99 பேருக்கு ரூ. 57.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 57 பேருக்கு ரூ. 7.54 லட்சம் மதிப்பில் உபகரணங்களும், வருவாய்த் துறை சாா்பில் ஒரு மாணவருக்கு உயா்கல்வி உதவித் தொகை முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரமும், விபத்து நிவாரண உதவி ஒருவருக்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

மேலும், மீன்வளத் துறை சாா்பில், 50 சதவிகித மானியத்தில், 40 நாட்டுப்படகு மீனவா்களுக்கு படகுக்கு வெளிப்புறத்தில் பொருத்திக் கொள்ளும் வகையில் தலா ரூ. 1.20 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 48 லட்சத்தில் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, பயனாளிகளுக்கு இவற்றை வழங்கினாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 471 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா். ரம்யாதேவி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலா் உலகநாதன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com