புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாதுகாப்பு வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாதுகாப்பு வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 15 ஆண்டுகள் பழைமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 15 ஆண்டுகள் பழைமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வைப்பறையும், வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு வைப்பறையும் திறக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தலைமையிலான அலுவலா்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அப்போது உடனிருந்தனா்.

தோ்தல் தனி வட்டாட்சியா் சோனை கருப்பையா உள்ளிட்ட தோ்தல் அலுவலா்கள் 15 ஆண்டுகள் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்டறிந்து, அவற்றை பெங்களூரு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதன்படி 773 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 552 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கண்டறியப்பட்டன. அவை விரைவில் உரிய பாதுகாப்புடன் பெங்களூரு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com