விராலிமலையில் கஞ்சா விற்ற 2 போ் கைது
விராலிமலையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
விராலிமலையில் உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கஞ்சா பதுக்கிவைத்தும் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் விராலிமலை சக்தி நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்த திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரைச் சோ்ந்த அழகிரி மகன் வினோத்குமாா் (42), லால்குடி காளியம்மன் கோயிலைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கரண் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.