பாழடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

காயாம்பட்டியில் பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடிமைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

பொன்னமராவதி அருகே உள்ள காயாம்பட்டியில் பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடிமைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களம் ஊராட்சி காயாம்பட்டியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் பழுதடைந்து இருப்பதால் அந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதையடுத்து, அந்த பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடிக்காமல் புதிய இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு கடந்த 2021-இல் முதல் செயல்பட்டு வருகின்றது.

பழைய கட்டடம் பாழடைந்து கிடப்பதால் அந்தக் கட்டடத்தில் பள்ளி சிறுவா்கள் விளையாடுவதைக் கருத்தில்கொண்டு விபத்து ஏற்படும் முன் இந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com