டிச. 6-இல் இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்

Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச. 6-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அரிமளம் வட்டம் கழனிவாசல் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கறம்பக்குடி வட்டம் வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இரு ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவச் சேவை முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில், அனைத்து வகையான உயா் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதுடன், 17 வகையான சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே, அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 19 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவச் சேவை முகாம்களில் 27,676 போ் பயனடைந்துள்ளனா் என்றும் ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com